Description

எதையும் கற்றுக் கொண்டால் உலகம் உன் கையில்

Android பயனர்களுக்கு Google Playstore எச்சரிக்கை!

Google Playstore இல் மீண்டும் Joker Virus தற்போது தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக Android பயனர்களுக்கு தற்போது முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.




Joker Virus (ஜோக்கர் வைரஸ்):

தற்போதைய கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இணையத்தில் மூழ்கி வருகின்றனர். இதனால் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்பட்டு வருகிறது. நன்மைகளாவது, இணையம் மூலம் மக்கள் பல்வேறு அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். ஆனால் சில மர்ம நபர்கள் இதை தவறுதலாக உபயோகப்படுத்தி பிறரின் தகவல்களை திருடி வருகின்றனர். அந்த வகையில் Joker என்னும் வைரஸ் Google Playstore மூலம் பல செயலிகளை தாக்கி வருகிறது.

அந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் SMS, OTP மற்றும் அழைப்புகள் போன்றவற்றை Joker Virus திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் Google Playstore பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் Joker Virus 8 App களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த 8 Apps குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த 8 Apps ஐ தற்போது Google நிறுவனம் Playstore  இல் இருந்து நீக்கியுள்ளது. எனவே Android பயனர்கள் இந்த Apps ஐ உடனடியாக தங்கள் சாதனங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 Apps:

01. Auxiliary Message

02. Fast magic SMS

03. Free CamScanner

04. Super Message

05. Element Scanner

06. Go messages

07. Travel wallpapers

08. Super SMS

1 comment:

Please sent me your Feedback , Dought , Comments

Powered by Blogger.